04 September, 2017

பாடல் பிறந்த கதை - கண்ணதாசன்


முன் அட்டையில் கவியரசு கண்ணதாசன் என்று குறிப்பிட்டு, பின் அட்டையில் தேடல் எஸ்.முருகன் என்பவர் கண்ணதாசனின் பாடல் பிறந்த கதைகளை பலரிடம் கேட்டு தெரிந்தவற்றை தொகுத்து அனுப்பியுள்ளார். அவற்றை காந்தி கண்ணதாசனும் அவரது சகோதரர் அண்ணாத்துரை கண்ணதாசனும் படித்து உண்மையானவற்றை மட்டும் புத்தகத்தில் வெளியிட்டுள்ளனர். முன் அட்டையில் தொகுத்தவர் தேடல் எஸ்.முருகன் என்று குறிப்பிட்டிருந்தால் வாசகர்களின் ஏமாற்றத்தை தவிர்த்திருக்கலாம்.

தி.மு.க விலிருந்து விலகிய கவியரசு கண்ணதாசன், ஈ.வே.ரா. சம்பத் அவர்களுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கட்சியை தொடங்கினார். தமிழ் தேசியக் கட்சி, பின் காங்கிரஸ் கட்சியோடு இணைந்தது. அதற்காக தமிழகத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரை நேரிடையாக குறிப்பிடாமல், பல பாடல்களின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் தி.மு.க விலும், கண்ணதாசன் காங்கிரஸிலும் இருந்ததால் தனது படங்களில் கண்ணதாசனின் பாடல்களை சேர்க்க வேண்டாம் என்று எம். ஜி. ஆர் கூறியுள்ளார். பின் ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து அவர் நடிக்கும் படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

இதனால் அவரது பாடல்களில் கண்டிப்பாக அரசியல் பற்றிய தாக்கம் கண்டிப்பாக இருந்திருக்கும்.

அவள் செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடலின் துவக்கத்தில் வரும் சில்லென்று பூத்த.. வரிகள், எங்கிருந்தாலும் வாழ்க, வரவு எட்டணா செலவு பத்தணா, நலந்தானா நலந்தானா போன்ற பாடல்கள் அமைந்ததற்கான காரணம் சுவையாக உள்ளது.

மூன்று முடிச்சு படத்தில் வரும் வசந்த கால நதிகளிலே என்ற பாடல் அந்தாதி வகையைச் சார்ந்தது. அதை பற்றிய குறிப்பு புத்தகத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இடம் பெறவில்லை.

No comments:

Post a Comment