ஜப்பானில் உள்ள டிஸ்னி லேண்டைப் போல் சென்னையிலும் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது அருமை அண்ணாச்சி வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்களின் கனவாக இருந்தது. அதை நிறைவேற்ற வேண்டி ஜப்பான் சென்றுள்ளார், வி.ஜி. சந்தோஷம். அங்கே நடந்த எக்ஸ்போ 85 கண்காட்சியையும் காண சென்றார். இது அவரது ஜப்பானிய பயண நூல்.
தனது ஜப்பானிய நண்பரான நிசிகாவோவுடன் ஜப்பானில் பல இடங்களை சுற்றிப் பார்த்து தனக்கு ஏற்பட்ட பிரம்மிப்பை நன்றாக விவரித்துள்ளார்.
அதே நேரத்தில், எம்.ஜி.ஆர் அவர்கள், கப்பல் வாங்குவதற்காக ஜப்பான் வந்தமையால் அவரை காணும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது.
அதிசய உலகம் எண்ணூரில் அமைவதாக புத்தகத்தில் கூறியுள்ளார். ஆனால், அது ஈஞ்சம்பாக்கத்தில் உள்ளது. கூகிளில் தேடிய பிறகு தான் அதன் வரலாறு தெரிந்தது. முதலில், அதிசய உலகம் எண்ணூரில் இருந்தது. பிறகு வெப்ப ஆற்றல் நிலையம், அங்கு வந்ததால், அதிசய உலகத்தை தற்பொழுதுள்ள இடத்திற்கு மாற்றிவிட்டனர்.
பன்னீர்தாஸ் அவர்களின் பெயர் காரணத்தை 84ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு கூறியுள்ளார்.
"திருநெல்வேலியை அடுத்த கள்ளி குளத்தில் அருள் வடிவாகக் காட்சி தரும் அன்னை அதிசய பனி மாதாவிற்கு நடைபெற்ற 8-ம் திருவிழா அன்றுதான் எங்கள் அண்ணாச்சி அவர்கள் பிறந்தார்கள். அதனால் பனிதாசன் என்றே அவர்களுக்குப் பெயர் சூட்டப்பட்டுது. ஆனால் பின்பு ஆசிரியர் ஒருவர் தான் பன்னீர்தாஸ் என்று அழைத்து, அதுவே பின்பு தொடருமாறு அம்மாவும் அப்பெயரையே அழைக்கச் செய்தார்."ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் இனிய வசந்தனே, அன்பு வசந்தனே, அன்புள்ள வசந்தனுக்கு, அன்புள்ள வசந்தனே என்று கடிதம் எழுதும் வகையில் ஆரம்பித்துள்ளார். வசந்தன் தனது மகன் என்றும், அவருக்கு இவர் ஜப்பானிலிருந்து தனது அனுபவங்களை கடிதமாக எழுதியுள்ளார் என்று எண்ணினேன். அதற்கான உண்மையான காரணம் கடைசி பத்தியை படித்ததும் தெரிந்து கொண்டேன்.
தூர்தர்ஷனில் பன்னீர்தாஸ் மற்றும் சந்தோஷம் அவர்களின் பேட்டியை பகுதி - 1, பகுதி - 2 Youtubeஇல் காணலாம்.
No comments:
Post a Comment