09 September, 2017

டூரிங் டாக்கீஸ்!


சேரன் தனது வாழ்க்கை அனுபவங்களை தொடராக ஆனந்த விகடனில் எழுதினார். அந்த தொடரின் புத்தக வடிவமே டூரிங் டாக்கீஸ்.

இந்த புத்தகத்தின் சிறு பகுதியே ஆட்டோகிராஃப் படம். அவரது அம்மாச்சியைப் பற்றி படித்ததும் அவரது படத்தை நேரில் பார்த்து வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது.

தனது சிறு வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பருத்தி பால் விற்றுள்ளார். நான் திருச்செந்தூர் சென்ற பொழுது, அங்கு கடற்கரையில் நிறைய சிறுவர்கள் பருத்தி பால் விற்பதை பார்த்துள்ளேன். அவர்களில் பல பேர் சேரன் போல் மிகப்பெரிய வெற்றியை அடைவர் என்று இப்பொழுது தோன்றுகிறது.

தனது பள்ளி பருவத்து காதல் பற்றி கூறும்பொழுது, நமது பள்ளி நாட்களை எண்ணி ஒரு சிறு புன்னகை வரும். புத்தகத்தில் உள்ள புகைப்படங்கள் அவரது திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவை யாவும் நன்றாக பொருந்துகிறது.

பாரதி கண்ணம்மா எடுக்கும்முன் தனது டைரெக்டரான கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றுள்ளார்.வெரிகுட்...பண்றா. இண்டஸ்ட்ரியே திரும்பிப் பார்க்கிற மாதிரி இருக்கணும்டா என்று வாழ்த்தியவர் ஒரு கடிதம் எழுதித் தந்தார். அவரது வாழ்த்து கடிதம்:

பாரதிராஜாவிடமிருந்து பாக்யராஜ்,
பாக்யராஜிடமிருந்து பார்த்திபன்,
பார்த்திபனிடமிருந்து விக்கிரமன்,
விக்கிரமினிடமிருந்து கே.எஸ்.ரவிக்குமார்,
கே.எஸ்.ரவிக்குமாரிடமிருந்து சேரன்.

வாழையடி வாழையாய் தொடரும் தமிழ் சினிமாவில் என் சிஷ்யன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
தான் பெற்ற வெற்றியை, பெற்றோர்களும் அவரது அம்மாச்சியும் பார்த்து மகிழ்ந்தது அவருக்கு கிடைத்த மாபெரும் வரம்.

08 September, 2017

My Days with Baasha: The Rajnikanth Phenomenon


Suresh Krissna narrates his direction experiences with Rajnikanth in the movies Annamalai, Veera and Baasha.

In the snake scene in Annamalai, Rajni's reactions were real and it was not planned or rehearsed. Once you read the narration, you will have a smile. The snake-charmer had confidently told the snake's mouth was stitched and safe for shooting. Later, the director came to know the snake which was to be used was inside the basket. Instead, the snake-charmer had given another snake for which he hadn't taken any precaution. Indeed, a shocking revealation to all. The concept for the Vandhaendaa Paalkaaran song was suggested by Rajni. He told Vairamuthu about a Kannada poem which explains the benefits of a Cow. Vairamuthu took the essence of the poem and added his own lines to boost Rajni as a hero. 

Kamal Hasan had conceptualised the song Maamaavukku Kudumma Kudumaa in the movie Punnagai Mannan. The lip sync was perfect while the dance movements were very fast. Prabhu Deva wanted theAnnamalai Annamalai song to be shot in slow motion and the lip sync should be normal. Neela Vaanam, Sundhari Neeyum, Kadhal Sadugudu were also taken differently.

For the Malaikkoil Vaasalil song in Veera, 20000 Chimney lamps were used and was shot in MRF Race Track in Sriperumbudur.

A cut scene from the movie Hum was the inspiration for Baasha and the title was given by Rajni. He came up with the lines Naa oru thadava sonna. The Ra Ra Ramaiah song was also suggested by Rajni, an inspiration from a Kannada poem. We can understand how much Rajni's inputs have enriched his movies. The book has many such interesting details. 

All successful movies should come out with a book on its making and interesting tidbits.

04 September, 2017

பாடல் பிறந்த கதை - கண்ணதாசன்


முன் அட்டையில் கவியரசு கண்ணதாசன் என்று குறிப்பிட்டு, பின் அட்டையில் தேடல் எஸ்.முருகன் என்பவர் கண்ணதாசனின் பாடல் பிறந்த கதைகளை பலரிடம் கேட்டு தெரிந்தவற்றை தொகுத்து அனுப்பியுள்ளார். அவற்றை காந்தி கண்ணதாசனும் அவரது சகோதரர் அண்ணாத்துரை கண்ணதாசனும் படித்து உண்மையானவற்றை மட்டும் புத்தகத்தில் வெளியிட்டுள்ளனர். முன் அட்டையில் தொகுத்தவர் தேடல் எஸ்.முருகன் என்று குறிப்பிட்டிருந்தால் வாசகர்களின் ஏமாற்றத்தை தவிர்த்திருக்கலாம்.

தி.மு.க விலிருந்து விலகிய கவியரசு கண்ணதாசன், ஈ.வே.ரா. சம்பத் அவர்களுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கட்சியை தொடங்கினார். தமிழ் தேசியக் கட்சி, பின் காங்கிரஸ் கட்சியோடு இணைந்தது. அதற்காக தமிழகத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரை நேரிடையாக குறிப்பிடாமல், பல பாடல்களின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் தி.மு.க விலும், கண்ணதாசன் காங்கிரஸிலும் இருந்ததால் தனது படங்களில் கண்ணதாசனின் பாடல்களை சேர்க்க வேண்டாம் என்று எம். ஜி. ஆர் கூறியுள்ளார். பின் ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து அவர் நடிக்கும் படங்களுக்கு பாடல்கள் எழுதினார்.

இதனால் அவரது பாடல்களில் கண்டிப்பாக அரசியல் பற்றிய தாக்கம் கண்டிப்பாக இருந்திருக்கும்.

அவள் செந்தமிழ் தேன்மொழியாள் என்ற பாடலின் துவக்கத்தில் வரும் சில்லென்று பூத்த.. வரிகள், எங்கிருந்தாலும் வாழ்க, வரவு எட்டணா செலவு பத்தணா, நலந்தானா நலந்தானா போன்ற பாடல்கள் அமைந்ததற்கான காரணம் சுவையாக உள்ளது.

மூன்று முடிச்சு படத்தில் வரும் வசந்த கால நதிகளிலே என்ற பாடல் அந்தாதி வகையைச் சார்ந்தது. அதை பற்றிய குறிப்பு புத்தகத்தில் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இடம் பெறவில்லை.