சேரன் தனது வாழ்க்கை அனுபவங்களை தொடராக ஆனந்த விகடனில் எழுதினார். அந்த தொடரின் புத்தக வடிவமே டூரிங் டாக்கீஸ்.
இந்த புத்தகத்தின் சிறு பகுதியே ஆட்டோகிராஃப் படம். அவரது அம்மாச்சியைப் பற்றி படித்ததும் அவரது படத்தை நேரில் பார்த்து வணங்க வேண்டும் என்று தோன்றுகிறது.
தனது சிறு வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பருத்தி பால் விற்றுள்ளார். நான் திருச்செந்தூர் சென்ற பொழுது, அங்கு கடற்கரையில் நிறைய சிறுவர்கள் பருத்தி பால் விற்பதை பார்த்துள்ளேன். அவர்களில் பல பேர் சேரன் போல் மிகப்பெரிய வெற்றியை அடைவர் என்று இப்பொழுது தோன்றுகிறது.
தனது பள்ளி பருவத்து காதல் பற்றி கூறும்பொழுது, நமது பள்ளி நாட்களை எண்ணி ஒரு சிறு புன்னகை வரும். புத்தகத்தில் உள்ள புகைப்படங்கள் அவரது திரைப்படங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. அவை யாவும் நன்றாக பொருந்துகிறது.
பாரதி கண்ணம்மா எடுக்கும்முன் தனது டைரெக்டரான கே.எஸ்.ரவிக்குமாரிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றுள்ளார்.வெரிகுட்...பண்றா. இண்டஸ்ட்ரியே திரும்பிப் பார்க்கிற மாதிரி இருக்கணும்டா என்று வாழ்த்தியவர் ஒரு கடிதம் எழுதித் தந்தார். அவரது வாழ்த்து கடிதம்:
பாரதிராஜாவிடமிருந்து பாக்யராஜ்,தான் பெற்ற வெற்றியை, பெற்றோர்களும் அவரது அம்மாச்சியும் பார்த்து மகிழ்ந்தது அவருக்கு கிடைத்த மாபெரும் வரம்.
பாக்யராஜிடமிருந்து பார்த்திபன்,
பார்த்திபனிடமிருந்து விக்கிரமன்,
விக்கிரமினிடமிருந்து கே.எஸ்.ரவிக்குமார்,
கே.எஸ்.ரவிக்குமாரிடமிருந்து சேரன்.
வாழையடி வாழையாய் தொடரும் தமிழ் சினிமாவில் என் சிஷ்யன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment