14 October, 2017

நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்


அட்டைப் படத்தில் ஒன்பது தலைவர்களது படம் உள்ளது. கடைசி இருவரை கண்டுபிடிக்க முடியவில்லை. சம்பத் மற்றும் சோ என்று நினைக்கிறேன்.

சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிட கழகம் ஆங்கிலேயர்களை ஆதரித்தனர். தி.மு.க 1949இல் தோன்றி 1967இல் ஆட்சியைப் பிடித்தது. சம்பத் அவர்களால் 1961இல் தமிழ் தேசிய கட்சி தொடங்கப்பட்டது. நேருவின் மறைவுக்குப் பின்னர் தமிழ் தேசிய கட்சி காங்கிரசுடன் இணைந்தது.

1967இல் காமராஜரின் தேர்தல் தோல்வி பற்றி கூறியுள்ள விளக்கம் வேறு எங்கேயும் கேள்விப்படவில்லை.
"1967 தேர்தலின் போது நாட்டில் தேவையான அரிசி ஸ்டாக் இருந்தது. அரிசி கையிருப்பு இருந்தும் கூட அதை வெளியில் ஒழுங்காக விநியோகிக்கவில்லை. அப்போது திரு. பக்தவத்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள். தலைவர் காமராஜ் அவர்கள் அசெம்பிளிக்குப் போட்டியிடுகிறார் என்றவுடன், தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தால் அவர் தான் முதலமைச்சராக வருவார் என்ற எண்ணங்கொண்ட பக்தவத்சலம், தான் மட்டும் ஜெயிப்பதற்கும், காமராஜ் உள்பட பல பேர் தோற்பதற்குமாக வழிவகுத்தார் என்று சொல்வதில் தவறில்லை.

தான் ஜெயிப்பதாகவும், காமராஜ் உள்பட மற்றவர்கள் தோற்பதாகவும் அவர் கனவு கண்டு கொண்டிருந்தார். "காங்கிரஸ் எப்படியும் ஜெயித்துவிடும். நாம் மறுபடியும் முதல் அமைச்சராக வரலாம்" என்று அவர் ஆசை கொண்டிருந்தார்.

இந்தத் தோல்விக்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் பக்தவத்சலமே."
ஜெயந்தி நடராஜன் பக்தவத்சலத்தின் பேத்தி. அறிஞர் அண்ணா புற்று நோய் பாதிக்கப்பட்டு இறந்தார்.
"நியாயமாக அண்ணா அவர்கள் கைகாட்டிய வழியில் வருவதானால் நெடுஞ்செழியன் வந்திருக்க வேண்டும். ஆனால் அவரை முந்திக்கொண்டு தன்னுடைய திறமைகளை முழுவதும் பயன்படுத்தி நண்பர் கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் ஆனார்கள்."
பின்னர் கண்ணதாசன் இந்திரா காங்கிரெசில் இணைந்தார்.

1972இல் எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்தது சோ மூலமாக கண்ணதாசன் தெரிந்து கொண்டார்.

அந்த காலத்து அரசியல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள விக்கிபீடியாவைப் படிக்கவும்.