இந்த சிறிய புத்தகத்தை பார்த்து எப்படி இதை சுய சரிதம் என்று வெளியிட்டார் என்ற கேள்வி வரும். உள்பக்கத்தில்'வனவாசத்தில்' விட்டுப்போன பகுதிகள் என்ற சிறு குறிப்பை கண்டவுடன் அதற்கான விடை கிடைக்கிறது.
வன வாசம், மன வாசம் படிக்காமலும் இந்த புத்தகத்தை படிக்கலாம்.
தான் சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்களையும் அதில் படிப்படியாக முன்னேறியதையும் நன்றாக விவரித்துள்ளார். கண்ணதாசன் என்றால் பாடல்கள் மற்றும் நூல்கள் மட்டுமே நினைவுக்கு வரும். இதை படித்தவுடன், அவர் சினிமா துறையில் கடந்து வந்த பாதை கண் முன்னே தெரிகிறது.
நடிகர் சந்திரபாபு பற்றிய உண்மைகளைப் படிக்கும் பொழுது சங்கடமாக உள்ளது.
சிவகங்கைச் சீமையை பள்ளி பருவத்தில் பார்த்துள்ளேன். கண்ணதாசனின் படம் என்றதும் அதை மறுபடி பார்க்க விரும்புகிறேன்.
இந்த புத்தகத்திலிருந்து கடின உழைப்பு முன்னேற்றத்தை தரும்என்பதை அறியலாம்.