தனது வசந்த காலத்தில், அவர் செய்த விவகாரங்களை விவரமாக எழுதியுள்ளார். தனது முதல் உறவை , விலை மாதரிடம் சென்ற அனுபவங்களை நம்மிடம் தைரியமாக பகிர்கிறார்.
தான் 22வது வயதில் சுவிகாரம் கொடுக்கப்பட்டார் என்பதை மிகவும் சாதாரணமாக கூறுகிறார்.
விறலி விடு தூது என்பது பற்றி குறிப்பிட்டுள்ளார். இதையும் படிக்க வேண்டும்.
நான் சந்தித்த எந்த பெண்ணும், இன்னொருவன் மனைவி அல்ல.இவ்வாறு கூறுபவர் அந்த அனுபவங்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கலாம். வனவாசத்தில் இருக்கும் என்று நம்புகிறேன்.
வெறும் காமத்தை மட்டுமே மூலமாகக் கொண்டு விலைமாதரை நான் நெருங்கியதில்லை. அவர்களிடம் இருந்து நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.