13 March, 2017

சோ வின் ஒ சா ம அ சா


ஒ சா ம அ சா - தலைப்பே சற்று வித்தியாசமாக உள்ளது. குமுதத்தில் தொடராக வெளியான போது சில வாரங்கள் படித்துள்ளேன். 

சோ அவர்கள் கைப்பட எழுதிய முன்னுரை நன்றாக இருந்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 76 வாரங்களோடு நிறைவு பெற்றது சற்று வருத்தமளிக்கிறது. 

நாடகம், சினிமா, சட்டம், அரசியல், பத்திரிகை என பல பணிகளில் இவர் ஈடுபட்டுள்ளார். ஒருவர் முயன்றால் பல துறைகளில் வெற்றி பெற முடியும் என்ற உண்மை புரியும்.

தமிழக அரசியல் மட்டுமின்றி மத்திய அரசியலிலும், கூட்டணி விவகாரங்களிலும் பெரும் பங்குபெற்றுள்ளார். 

சோ பெயர்க்காரணம், துக்ளக் தொடங்கிய விதம் பற்றிய செய்திகள் அருமை. 

முகமது பின் துக்ளக் படத்தில் DMKவிற்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார். அவசியம் பார்க்க வேண்டும்.

மற்றவர்கள் நம்மை நம்பி சொல்லும் ரகசியங்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இவர் சிறந்த எடுத்துக்காட்டு.

இவரது மற்றொரு புத்தகமான அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் , இது போல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.